Friday, January 15, 2021

கேஸ் சிலின்டர் எவ்வளவு அளவு உள்ளது – சுலபமாக தெரிந்துகொள்ளும் சூப்பர் TRICKS

gas cylinder level

கேஸ் சிலின்டர் அளவு சுலபமாக தெரிந்துகொள்ளும் சூப்பர் TRICKS..!


கேஸ் சிலின்டர் எவ்வளவு (gas cylinder level) அளவு உள்ளது, என்பதை தெரிந்து கொள்வதற்கு முன் சில பொது தகவலை பற்றி இப்போது நாம் காண்போம்.

நாம் வாங்கும் கேஸ் சிலின்டரில் A -25, A -24, D-19 என்ற எண் எழுதப்பட்டிருக்கும், அவை இந்த கேஸ் சிலின்டரின் கால அவகாசங்களை குறிக்கின்றது. அதாவது A-25 என்பது 2025 ஆண்டு இந்த கேஸ் சிலின்டரின் கால அவகாசங்கள் முடிவடைகிறது என்ற அர்த்தமாகும். எனவே நீங்கள் கேஸ் சிலின்டர் வாங்கும் போது அவற்றில் குறிக்கப்பட்டிருக்கும் நம்பர்களை பார்த்து வாங்க வேண்டியது மிகவும் அவசியமாகும்.

அதேபோல் நாம் வாங்கும் கேஸ் சிலின்டரில் சீல் கவர் முழுமையாக பொறுத்தப்பட்டிருக்கின்றதா என்பதை கவனிக்க வேண்டும். ஏன் என்றால் அவற்றில் கேஸ் திருடப்பட்டிருக்கவும் அதிக வாய்ப்புகள் இருக்கின்றது. எனவே சீல் கவர் முழுமையாக மூடப்பட்டுள்ளதா என்பதை கவனிக்கவும்.

இப்போது நாம் பயன்படுத்தும் கேஸ் சிலின்டரில் எவ்வளவு கேஸ் உள்ளது என்பதை எப்படி அறிவது என்பதை பற்றி இப்போது நாம் காண்போம்.

உங்கள் கேஸ் சிலின்டரில் தண்ணீரால் நீளவாக்கில் ஒரு கோடு இடவேண்டும். இவ்வாறு செய்த பிறகு சுமார் 3 அல்லது 4 நிமிடங்கள் வரை காத்திருக்கவும்.பின்பு உங்கள் கேஸ் சிலின்டரை பார்வையிடவும். இப்போது உங்கள் கேஸ் சிலின்டரில் தண்ணீர் அப்படியே இருந்தால் அவற்றில் கேஸ் முழுமையாக உள்ளது என்று அர்த்தம்.

அதுவே சில இடங்களில் தண்ணீர் காய்ந்து சில இடங்களில் தண்ணீர் அப்படியே இருந்தால் அவற்றில் கேஸ் குறைவாக உள்ளது என்று பொருள்.

அதுவே தண்ணீர் முழுமையாக காய்ந்துவிட்டால் அவற்றில் கேஸ் இல்லை என்று பொருள்.

இனிமேல் இந்த சூப்பர் TRICKS தெரிந்து கொண்டு கேஸ் சிலின்டரின் அளவை நாமே தெரிந்துகொள்ள முடியும்.

No comments:

Post a Comment

How can one make money starting a blog?

How can one make money starting a blog? To earn money through a blog there are several important factors to cover: your niche, website, and ...